பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக தி.மு.க புகார் தெரிவித்துள்ளது.
தி.மு.க.,வின் கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில் கோவை அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் பே, டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் பணம் அனுப்பப்படுவதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் தங்கி இருப்பவர்களின் பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களுடன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடிக்கு இந்த புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“