பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, கோவை புறநகரில் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வினோத பிரச்சாரத்தை தி.மு.க.,வினர் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு உளுந்து வடை சுட்டு வழங்கியதுடன், பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர். மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை துண்டு சீட்டில் பட்டியலிட்டு அதில் வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வினோத முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் சாலையோரத்தில் தி.மு.க.,வினரால் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட நதிகள் இணைப்பு உள்ளிட்ட 15 திட்டங்களை பட்டியலிட்டு விமர்சனம் செய்திருந்தனர்.
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ள நிலையில் தி.மு.க.,வினரின் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கும் வினோத பிரச்சாரம் குறித்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“