கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரில் வடக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வேட்பாளராக போட்டியிட்ட சண்முகசுந்தரம் என்பவர் விவசாயம் தோட்டத்தில் கூலி தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
அங்கு அவர்களுக்கு சிமெண்ட் சீட்டினால் அமைக்கப்பட்ட வீட்டில் கணவன் சந்துரு, மனைவி புவனேஸ்வரி, மூன்று குழந்தைகள் மற்றும் அருகே உள்ள மற்றொரு வீட்டில் புவனேஸ்வரி தாய், தந்தை இருவர் என மொத்தம் ஏழு பேர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலை உறங்கிக் கொண்டு இருந்த போது சிமெண்ட் சீட்டுகள் உடைக்கு சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவர்கள் பார்க்கும் பொழுது மூன்று காட்டு யானைகள் உணவுப் பொருட்களை தேடி சேதப்படுத்தி வந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்தவர்கள் அங்கு இருந்து குழந்தைகளுடன் நூலிழையில் உயிர் தப்பி தோட்டத்துக்குள் ஓட்டிச் சென்று உயிர் பிழைத்து உள்ளனர். உடனடியாக வனத் துறையினருக்கு தொலைபேசியில் அழைத்து உள்ளனர். ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை, பின்னர் இதுகுறித்து தோட்டத்து உரிமையாளர் சண்முகசுந்தரத்திடம் தகவல் கொடுத்து உள்ளனர்.
அவர் அருகே உள்ள வளைய பாளையத்தை சேர்ந்த குமார் என்பவரிடம் கூறி உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குமார் வாகனத்தில் ஒலி எழுப்பி உள்ளார். இதனால் அங்கு இருந்த யானைகளை சென்றது.
யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று அப்பகுதியில் நேரில் சென்று நிவாரண நிதி உதவி அளித்து - இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுரையும் வழங்கி வந்த நிலையில் இன்று அதிகாலை காட்டு யானைகள் தி.மு.க கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ வேட்பாளராக போட்டியிட்ட சண்முகசுந்தரம் என்பவர் தோட்டத்துக்குள் புகுந்து கூலி வேலை செய்து வரும் குடும்பத்தினரை தாக்க முயன்ற போது மூன்று குழந்தைகளுடன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பி.ரஹ்மான்.
கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“