கோவை சின்னதடாகம் பகுதியில் இரவு தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை இரும்பு வேலியை சேதப்படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வாறு நுழையும் யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.இந்த நிலையில் நேற்றிரவு சின்னதடாகம் வரப்பாளையம் பகுதியில் குணசேகரன் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு போடப்பட்டிருந்த இரும்பு வேலியை சேதப்படுத்தி உள்ளது..
இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது..ஊருக்குள் ஒற்றை காட்டுயானை அடிக்கடி வருவதால் பொதுமக்கள் பாதிகாப்பாக இருக்கும் படி வனத்திறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.