கோவையில் தொழில்பூங்கா அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் மாநில அரசிடமிருந்து நிலத்தை காப்பாற்ற கோரி விநாயகரிடம் மனு அளித்து விவசாயிகள் வேண்டிக் கொண்டனர்.
அன்னூர் பகுதியில் தொழில்பூங்கா அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுமார் 3000 ஏக்கர்க்கும் மேல் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்: அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாமலை தலைமையில் டிச.7ல் போராட்டம் – பா.ஜ.க அறிவிப்பு
இதற்கு பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-05-at-19.52.41.jpeg)
இந்நிலையில் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புலியகுளம் விநாயகரிடம் அவர்களது நிலத்தை காப்பாற்ற வேண்டி மனு அளிக்க நடைபயணம் மேற்கொண்டனர். இன்று அதிகாலை அன்னூரில் இருந்து புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணமாகவே புலியகுளம் விநாயகர் கோவிலை வந்தடைந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-05-at-19.52.42.jpeg)
கோவிலுக்கு வந்தடைந்த விவசாயிகள் விநாயகரிடம் அவர்களது கோரிக்கை மனுவை வைத்து தங்களது நிலத்தை காப்பாற்ற அருள்புரிய வேண்டுமென வேண்டி கொண்டனர். மேலும் நிலத்தை காப்பாற்ற வேண்டுமென கோவில் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil