கோவை ஃபோகஸ் எஜுமடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 3,115 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களைப் பெற்றுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/62823ee6-89a.jpg)
கடந்த மாதம் 25 ஆம் தேதி எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனம் சட்ட விரோதமாக மூடப்பட்டதால், ஊழியர்கள் வேலை இழந்து தவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததை அடுத்து, தொழிலாளர் நலத் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம், பணிபுரிந்த வருடத்தை கணக்கில் கொண்டு இழப்பீட்டுத் தொகை மற்றும் கிராஜுவிட்டி வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகை மற்றும் கிராஜுவிட்டி வழங்கப்படவில்லை என்றும், ஒரு மாத ஊதியமும் பாதி பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என்றும், ஊழியர்கள் கூறுகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/4106a69a-9c3.jpg)
குறிப்பாக, டீம் லீடர் மற்றும் களப் பணியாளர்களுக்கு எந்தவித பணப் பலனும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீடுகளை பெற்றுத் தருமாறு ஐ.டி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கூறியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறி ஐ.டி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு பேச சென்றனர்.