கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக மழை பெய்ய கூடும். மழை பெய்வதற்கு முன்பு பல்வேறு இடங்களில் பனி மூட்டம் காணப்படுவது வழக்கம். அதன்படி நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது. உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகள் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/052075c0-223.jpg)
இதனால் கோவையில் அதிகாலையில் வழக்கமாக இருக்கும் குளிர்ச்சியான சூழலை விட அதிக அளவிலான குளிர்ச்சி நிலவியது. மேலும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“