உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் டிரினிட்டி கண் மருத்துவமனையின் சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று துவங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண் பரிசோதனை முகாமின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
இம்முகாம் தொடர்பாக பேசிய மருத்துவமனையின் சிறப்பு கண் மருத்துவர் அனுஷா நீரிழிவு நோய் என்பது அனைத்து உருப்புகளையும் பாதிப்பதாகவும் குறிப்பாக சிறுநீரகம், கண் மற்றும் பல நரம்புகளில் உள்ள செல்களை பாதிப்பதாவும் தெரிவுத்தார்.
இதில் மற்ற பாதிப்புகள் என்பது ஆரம்ப காலத்திலேயே கண்டறிய முடிவதில்லை என குறிப்பிட்டவர் கண்களை பரிசோதனை செய்வதன் மூலம் எளிதில் அதன் ஆரம்ப கால பாதிப்புகளை கண்டறிந்து நீரழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் புதிய கிளை துவங்கி டிரினிட்டி மருத்துவமனை கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்கு சேவையாற்றும் விதமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டவர்,
உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ். புரம் டிரினிட்டி கண் மருத்துவமனை சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நடைபெற உள்ள இந்த இலவச கண் பரிசோதனை முகாம் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“