scorecardresearch

கோவையிலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு

கோவையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை சோதனை

கோவையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை பெங்களூர் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் கோவை L&T புறவழிச் சாலையில் நில விற்பனை செய்து வருவதும்  சிங்காநல்லூர் போன்ற இடங்களில் வீட்டுமனைகள் விற்பனை செய்ய பணிகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai g square office income tax raid