scorecardresearch

வட மாநிலங்களில் இருந்து கூரியரில் வரும் கஞ்சா: போலீஸ் கண்காணிப்பதாக எஸ்.பி பேட்டி

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து திருடப்படும் மற்றும் பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் அவ்வப்போது மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.

வட மாநிலங்களில் இருந்து கூரியரில் வரும் கஞ்சா: போலீஸ் கண்காணிப்பதாக எஸ்.பி பேட்டி

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து திருடப்படும் மற்றும் பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் அவ்வப்போது மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 செல்போன்கள் அவர்களது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியதாவது.

மாவட்டத்தில் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றவியல் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசினார்.தமிழ் நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை அளவுக்கு கொண்டு சென்றதில் கோவை முதலிடம்

கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும் ஆனால் 15 சதவீதம் கஞ்சாவை கலந்து விற்பனை செய்கின்றனர். பவானி ஆற்றில் இனி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது

கஞ்சா பயன்பாட்டை பலரும் இனம் மதம் தாண்டி செய்கின்றனர்.. எனவே வடமாநிலத்தவர் தான் என கொண்டு செல்ல வேண்டாம் என நினைக்குறேன் கூரியர்களில் வடமாநிலங்களில் இருந்து அனுப்புகின்றனர். அதையும் கண்கணித்து வருகிறோம்

கொலை ஆதாய கொலை கொள்ளை திருட்டு பின்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் சட்ட விரோதமதி விற்பனை போதை பொருள் சூதாட்டம் லாட்டரி விற்பனை செல்போன் திருட்டு என மாவட்ட காவல்துறை 2023 இல் இதுவரை 1550 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

NDPS சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் தொடர்புடைய 68 பேர்  செய்யப்பட்டு ₹27,86,330 மதிப்புள்ள சுமார் 312.5. கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று இவ்வாறு தெரிவித்தார். செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai ganja powder from north india

Best of Express