Advertisment

கோவையில் காந்தி தங்கிச் சென்ற வீடு - அக்டோபர் 2"ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்

கோவை போத்தனூர் மேட்டூர் சாலை சந்திப்பு அடுத்து ஜி.டி.நாயுடு குழுமத்தின் விருதுநகர் மாளிகை உள்ளது. 1934"பிப்ரவரி ஆறாம் மற்றும் ஏழாம் தேதிகளில் கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள வீட்டில் தங்கி மகாத்மா காந்தி தலைவர்களை சந்தித்தார்.

author-image
WebDesk
New Update

இந்த வீடு தான் தற்போது காந்தியின் நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன காந்தி பயன்படுத்திய பொருட்களின் மாதிரிகள் புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

publive-image

இது குறித்து ஜி.டி. நாயுடு பேரன் ராஜ்குமார் மற்றும்  நினைவகமாக ஆளுமை குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் கூறும்போது

publive-image

காந்தி தங்கிச் சென்றதை வரும் சந்ததியினர் அறியும் வகையில் இங்கு சீரமைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது 153"வது பிறந்த நாளான வரும் அக்டோபர் இரண்டில் இதனை காந்தியவாதி கிருஷ்ணம்மாள் திறந்து வைக்கிறார்.

publive-image

காந்திக்கும் கோவைக்கும் உள்ள தொடர்பு குறித்த பொருட்கள் அடங்கிய கண்காட்சி பகுதி புகைப்படப்பகுதி நூலகம் உரையாடல் கூடம் என நான்கு பகுதிகளாக இந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

publive-image

தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை மக்கள் இலவசமாக பார்வையிடலாம்திங்கட்கிழமை மூடப்பட்டு இருக்கும். தலைவர்களின் கலந்துரையாடல் மாணவர்களுக்கான பலவிதப் போட்டிகள் நடத்தப்படும் நினைவகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வரவேற்கப்படும் என்றார்.

publive-image

அக்டோபர் 2"ம் தேதி முதல் காந்தி தங்கிச் சென்ற நினைவக வீட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கியிருப்பது கோவை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : பி. ரஹ்மான், கோவை மாவட்டம்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment