தமிழ் மார்க்சியத்தின் மூல முன்னோடி கோவை ஞானி மரணம்
Kovai Gnani passed away : தமிழ் மார்க்சியம் என்பதன் மூல முன்னோடி கோவை ஞானி அவர்கள். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார்.
Kovai Gnani passed away : தமிழ் மார்க்சியம் என்பதன் மூல முன்னோடி கோவை ஞானி அவர்கள். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார்.
தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானி (வயது 86), உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
Advertisment
கோவையில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் ஞானி. இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றவர்.
கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். மார்க்சிய நெறியில் தமிழ் இலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டவர். கோவை ஞானி - இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
Advertisment
Advertisements
‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார்.
தமிழ் மார்க்சியம் என்பதன் மூல முன்னோடி கோவை ஞானி அவர்கள். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார்.
இவர், தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பன்முகத் தன்மை வாய்ந்த கோவை ஞானி இறுதி மூச்சுவரை தமிழ் ஆய்வு உலகில் இயங்கி வந்த மிகப் பெரிய ஆளுமை. முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் கோவையில் இன்று முற்பகல் கோவை ஞானி காலமானார். அவரது மறைவுக்கு ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil