கோவை அரசு மருத்துவ மனையில் சக்கர நாற்காலிக்கு ரூ.100 வசூல்; 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

சக்கர நாற்காலி நோயாளிகள் செல்வதற்கு ரூபாய் 100 வசூல் செய்த விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம்; கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை

சக்கர நாற்காலி நோயாளிகள் செல்வதற்கு ரூபாய் 100 வசூல் செய்த விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம்; கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை

author-image
WebDesk
New Update
kovai wheel chair issue

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் நோயாளிகள் செல்வதற்கு ரூபாய் 100 வசூலிப்பாக ஊழியர்கள் மீது புகார் எழுப்பப்பட்ட விவகாரத்தில், 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உட்கார வைத்து அழைத்துச் செல்ல 100 ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஏழைகள், நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தாலும் பரிசோதனை, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை என பல்வேறு இடங்களுக்கு செல்ல நேரிடுகிறது. ஆனால் நடக்க முடியாதவர்களுக்கு சர்க்கரை நாற்காலி கிடைப்பது இல்லை.

இது பற்றி பாதிக்கப்பட்ட நோயாளியின் மகன் காளிதாஸ் கூறும் போது, “எனது தந்தைக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. சர்க்கரை நோயால் கால் எடுக்க வேண்டிய நிலை உள்ளார். தந்தையை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டடத்திற்கு பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது அலைக்கழிக்கப்பட்டோம். சக்கர நாற்காலி கேட்டு 2 மணி நேரம் காத்து இருந்தும் யாரும் வரவில்லை. மேலும் 100 ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என ஒரு ஊழியர் கூறினார்.

பணத்தை கொடுப்பதாக கூறிய பிறகு ஏற்கனவே காத்திருப்பில் உள்ளவர்களை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை காத்திருங்கள் என்று கூறினார். வெறுப்பாகி அவர் சிகிச்சையே வேண்டாம் என திரும்பி சென்றுவிட்டோம்,” என்றார்.

Advertisment
Advertisements

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறும் போது ”ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக யாரும் இதுவரை புகார் கூறவில்லை. புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம். லஞ்சம் கேட்பதை ஏற்க முடியாது. மருத்துவமனை சாலை மோசமாக இருப்பதால் வீல் சேர் சேதமடையும். சாலை அமைக்கும் பணி முடிந்து விட்டால் வீல் சேர் செல்வது சுலபமாக இருக்கும். தேவைக்கேற்ப அதிக வீல் சேர்கள் வாங்கப்படும்,” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சக்கர நாற்காலி நோயாளிகள் செல்வதற்கு ரூபாய் 100 வசூல் செய்த விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்கள் எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகியோரை பணி நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெறுவதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: