Advertisment

கோவையில் 100 பவுன் கொள்ளை : முக்கிய குற்றவாளிகள் கைது

ராஜேஸ்வரி வீட்டிலுள்ள தங்க வைர நகைகள் சுமார் 100 பவுன் மற்றும் பணம் ரூபாய் 2-1/2 கோடி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
100 பவுன் கொள்ளை

100 பவுன் கொள்ளை

கடந்த மார்ச் 21 ஆம் தேதி புலியகுளம் கிட்னி சென்டர் அருகே உள்ள கிரீன் பீல்ட் காலனியில் வசித்து வந்த ராஜேஸ்வரி 63 என்பவருக்கு நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலை அடைய வைத்து வர்ஷினி அவரது நண்பர் அருண்குமார், ஓட்டுநர் நவீன் குமார் ஆகியோர்

Advertisment

ராஜேஸ்வரி வீட்டிலுள்ள தங்க வைர நகைகள் சுமார் 100 பவுன் மற்றும் பணம் ரூபாய் 2-1/2 கோடி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து குற்றத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் சுரேந்தரை மார்ச் மாதம் 24 ஆம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய KA 09 MA 6594 என்ற பதிவு எண் கொண்ட HONDA BRIO சிவப்பு கலர் காரும் கைப்பற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அருண்குமார் திருடிக் கொண்டு சென்ற பணம் ரூபாய் 3120500/- சேலம் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்து வர்ஷினியிடம் சுமார் 70 சவரன் தங்க வைர வளையல்கள் மற்றும் பணம் ரூபாய் 35 இலட்சம் TN 37 DH 8000 BREZZA என்ற கார் மற்றும் I- Phone ஒன்றையும், நவீன்குமாரிடம் இருந்து பணம் ரூபாய் 5 இலட்சம் மற்றும் TN 37 DH 5637 ALTO காரையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இவ்வழக்கில் மொத்தம் தங்க வைர நகைகள் 100 சவரன் மற்றும் பணம் ரூபாய் 4800000/- இலட்சம் மற்றும் I-Phone ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் பணம் ரூபாய் 3120500/- இலட்சத்தை சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வர்ஷினிக்கு பொள்ளாச்சி கிழக்கு, தாராபுரம் காவல் நிலையம், சிங்காநல்லூர் மற்றும் கோவை மாநகர குற்ற பிரிவிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment