நூதன பிரச்சாரம் மூலம் கோவை தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்கு சேகரித்த தி.மு.க-வினர்.நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க கோரி திமுக"வினர் நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது, எதற்காக கெட் அவுட் மோடி என கூறுகிறோம் என விளக்கினர், கடந்த ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்பதையும், எதற்காக உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
செய்தி: பி.ரஹ்மான்.