கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டி என்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான் என்பவரின் மகன் ஜெபஸ்டீன் (வயது 20) என்பவர் நேற்று தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார்.
இரவு நேரமாகியும் திரும்பி வராததால் உறவினர்கள் அவரை தேடிச்சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெபஸ்டீன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதனையடுத்து ஜெபஸ்டீனுடன் சென்றவரிடம் விசாரித்தப்போது, அவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்ததாக உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/801e261f-d85.jpg)
இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை மீட்டு சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.