Advertisment

தண்டவாளத்தில் மண் சரிவு; நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து; பயணிகள் ஏமாற்றம்

author-image
WebDesk
New Update
nilgiri train land slide

தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை செல்லும் நீலகிரி மலை ரயில் சேவை தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கல்லாறு மற்றும் ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துமலை ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. இதை அடுத்து மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தண்டவாளத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த உடன் வழக்கம்போல மலை ரயில் சேவை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளிடம் பெறப்பட்ட கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருந்து ஆர்வத்துடன் சென்ற சுற்றுலாப் பயணிகள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nilgiris kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment