scorecardresearch

கோவை வீதிகளில் ஹாயாக உலா வரும் குரங்குகள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதிகளில் குரங்குகள் சுற்று திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உக்கடம் அல் அமீன் காலனி பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குரங்கு
குரங்கு

கோவை மாநகரப் பகுதிகளில் குரங்குகள் சுற்று திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  உக்கடம் அல் அமீன் காலனி பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000″க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கிமீ தாண்டி தான் குரங்குகள் அவ்வப்போது வந்து செல்லும்.  இந்நிலையில் தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத் துவங்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அங்குள்ள மின்கம்பங்கள் மீது ஏறி அங்கும் இங்கும் தாவி வருகின்றன. மேலும் அங்குள்ள வீடுகளுக்குள்ளும் செல்ல முயல்வதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மளிகைக்கடை, பழக்கடை வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் இக்குரங்குகளை  விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதே சமயம் மாநகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai monkey menaces people and they were in fear