கோவையில், இந்து சகோதர சகோதரிகளுக்கு தண்ணீர் உள்ளிட்ட உணவுகளை கோட்டை பகுதி இஸ்லாமிய மக்கள் வழங்கும் காட்சிகள் மதங்களைத் தாண்டிய சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதையும் படியுங்கள்: முதல்முறையாக பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி. 3,000 மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
நேற்று 25.02.22 சனிக்கிழமை இரவு கோவை கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள கோட்டை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அம்மனை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்து சகோதர, சகோதரி பக்தர்களுக்கு கோட்டைமேடு பகுதி இஸ்லாமிய பொதுமக்கள் காபி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கி தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். மதங்களைக் கடந்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil