கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹாலில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த் திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுடன் துவங்கப்பட்ட தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்று விழா, அக்னிசாட்டு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விநாயகர், அம்மன் எழுந்தருளி அக்னிசாட்டு கம்பம் வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட கோவை ஆட்சியர்

இதனை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேர்முட்டி வீதியில் கிளம்பிய இந்த தேர், டவுன்ஹால் முக்கிய வீதி வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேரில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேர் திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து ஆறாம் தேதி வசந்த விழா உடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

தேர் நிகழ்வில் நெகிழ்ச்சியாக கோனியம்மன் கோயில் தேர் திருவிழாக்கு வருகை தரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க, கோயில் அருகே உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசல் முன்பு பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை இஸ்லாமியர்கள் வழங்கினர். இது ஜாதி மதங்களைக் கடந்து சமத்துவ ஒற்றுமையை ஒன்றிணைக்கும் நிகழ்வாக அமைந்தது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil