கோவையில் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் கைது.
கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெரியநாயக்கன் பாளையம் பகுதியை கோவர்தனன் (23 ) பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார் (21) மற்றும் கணேசன் நவீன்குமார் (21)என்பவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா,208-போதை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் 4-சிரஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.