scorecardresearch

பிணையில் வெளிவந்த குற்றவாளி கொலை: 4 பேர் சரண்

கோவையில் பிணையில் வெளிவந்த குற்றவாளியை கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

பிணையில் வெளிவந்த குற்றவாளி கொலை: 4 பேர் சரண்

கோவையில் பிணையில் வெளிவந்த குற்றவாளியை கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்த சக்தி (எ) சக்தி பாண்டியன் கடந்த 12ம் தேதி இரவு நவஇந்தியாவிலிருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த  ஆறு பேர் கொண்ட கும்பல்  சத்தியபாண்டியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். 

இச்சம்பவத்தில் சக்திபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்ட  சம்பவத்தில் சக்தி பாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக  சக்தி பாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில்

முன் விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் காஜா உசேன், சஞ்சய் குமார், ஆல்வின், சல்பல் கான் ஆகிய 4 பேர் சரணடைந்துள்ளனர்.

தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலிஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட பின் அச்சம்பவம் குறித்தான கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான்.கோவை  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai old murder case update

Best of Express