கோவிட் தொற்றுக்கு கோவையில் முதியவர் பலி.தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையை சேர்ந்த முதியவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கோவையை சேர்ந்த 74 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சுவாச பிரச்சனை, காரணமாக கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியானதாகவும் இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/bdb4d585-441.jpg)
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,621 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான். கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“