ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார பத்திரிக்கையை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வாரப் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நாக்கை அறுத்து விடுவதாக ஓம்கார் பாலாஜி பேசி இருந்தார். இதுதொடர்பாக தி.மு.க வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்து கொண்டு பேசினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் ஓம்கார் பாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்யப்பட்டு உள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியினர் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மாநில இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி இன்று பந்தய சாலை C.2 காவல் நிலையம் முன்பு அர்ஜூன் சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சர்ச்சை கருத்து; அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது
வார பத்திரிக்கைக்கு எதிராக இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்; சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி; கைது செய்து கோவை போலீஸ் விசாரணை
Follow Us
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார பத்திரிக்கையை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வாரப் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நாக்கை அறுத்து விடுவதாக ஓம்கார் பாலாஜி பேசி இருந்தார். இதுதொடர்பாக தி.மு.க வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்து கொண்டு பேசினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் ஓம்கார் பாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்யப்பட்டு உள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியினர் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மாநில இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி இன்று பந்தய சாலை C.2 காவல் நிலையம் முன்பு அர்ஜூன் சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.