Advertisment

கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர்… முன்னாள் எம்.பி. கருத்து தவறு - கோவை போலீஸ் கமிஷனர் பேட்டி

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் பாதசாரிகளுக்காக காந்திபுரம் சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

author-image
WebDesk
New Update
coimbatore new, Kovai news, Tamil news, Kovai Police commissioner,

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் பாதசாரிகளுக்காக காந்திபுரம் சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிக்னலை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதவது:

கோவை மாநகரில் போக்குவரத்தை சரி செய்ய சாலையை கடக்க கூடிய பாதசாரிகளுக்கு தனிநேரம் ஒதுக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சுமி மில் சிக்னலில் இது போன்று வசதி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது காந்திபுரம் சிக்னலில் பாதசாரிகள் கடக்க சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலையை கடக்க கூடிய பொதுமக்கள் அச்சமின்றி வசதியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதசாரிகளுக்கு ஏற்ப தற்போது இரண்டாவது சிக்னல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சிக்னல்களிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த சிக்னல் திருவிழா நேரங்களில் பயனுடையதாக இருக்கும்.

கோவையின் எல்லை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இரவு ரோந்து டைனமிக் வெய்கில் செக்கிங் நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் வாகனங்களை தணிக்கை செய்கிறோம் .

அதிமுக முன்னாள் எம்.பி.எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறான தகவல். அவரது பேட்டியை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனன் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment