/tamil-ie/media/media_files/uploads/2022/10/Kovai-police-commissioner.jpg)
கோவை மாநகர காவல் துறை சார்பில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க 750 போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் தீபாவளி கூட்டம் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு தேவையான துணி உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதி பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கடைவீதி பகுதியில் உள்ள ஒப்பணக்கார வீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புக்கு கோபுரங்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தீபாவளிக்கு பொதுமக்கள் எளிமையாக வந்து செல்ல பல்வேறு வசதிகளை செய்துள்ளோம். ஒப்பணக்கார வீதி, 100 அடி சாலை, கிராஸ் கட் சாலை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளனர்.
ஜேப்படி திருடர்களிடம் இருந்து பொது மக்களை காக்க கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-17-at-10.02.59-PM-1.jpeg)
அதேபோல, கண்காணிப்பு கோபுரங்களையும் அமைத்துள்ளோம். இரண்டு துணை ஆணையாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, பொதுமக்களின் கூட்ட நெரிசலை குறைக்க இரவு நேரங்களில் கடை நேரத்தை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். அதேபோல தீபாவளிக்காக தீயணைப்பு ,மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தங்களது வீட்டை பூட்டி செல்லும்பொழுது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள உடமைகள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பேருந்துகளில் ஏறுபவர்கள் வரிசையாக ஏற காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-17-at-10.03.00-PM.jpeg)
தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தீபாவளி பண்டிகை கூட்டத்தை முன்னிட்டு தொடர்ந்து கண்காணித்து வருவதால் கோவை மாநகரில் குற்றங்கள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை.
பொதுமக்களின் நிலையை அறிந்து ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும், கைது நடவடிக்கைக்கும் தயங்க மாட்டோம். பொதுமக்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை அறிந்தால் புகார் தெரிவிக்கலாம்.பார்க்கிங் வசதிகளையும் அதிகரித்து வருகிறோம். அதேபோல கடைவீதி பகுதிகளில் பேருந்துகள் வராமல் மாற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மக்கள் அதிகம் வரும் பகுதிகளில் 14 தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us