கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், பலர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/ce2aac22-195.jpg)
இந்த சம்பவத்தின் எதிரொலியாக கேரளா - தமிழக எல்லை பகுதிகளில் சோதனையை தீவிர படுத்த தமிழக டி.ஜி.பி அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, கோவை எஸ்.பி.பத்ரிநாரயணன் மேற்பார்வையில் 80க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/930a5507-adb.jpg)
அதேபோல் கோவையில் உள்ள முக்கிய தேவலாயங்கள் ,கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100 க்கு மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/0032b51c-3a9.jpg)
மேலும், தமிழக - கேரளா எல்லையான கோவையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் எஸ்.பி.பத்ரிநாரயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் வாளையாறு சோதனை சாவடியில் மோப்ப நாய் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெறுவதை எஸ்.பி பத்ரிநாரயணன் நேரில் பார்வையிட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/8d4ac972-6eb.jpg)
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி பத்ரிநாராயணன், கோவையில் உள்ள தமிழக - கேரளா எல்லை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. ,அதுமட்டுமல்லாது பதட்டமான மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/1e8893d9-03a.jpg)
மேலும் கோவை ரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை டி.எஸ்.பி ரித்தீஷ் பாபு தலைமையில் ரயில்வே காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/d253cda8-12f.jpg)
இந்த சோதனையில் வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களிடமும் காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“