கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட போலீசார் போதைப்பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பல்வேறு பெட்டிக்கடைகள் மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அதனை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/baecca1b-8bc.jpg)
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சோதனையானது மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் காட்டூர் காவல் நிலைய போலீசார் 40க்கும் மேற்பட்டோர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/549d6024-381.jpg)
பேருந்து நிலையத்தில் செயல்படும் கடைகளிலும் பொது மக்களிடமும் பயணிகளிடமும் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களது உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/0a4a019e-f58.jpg)
சோதனையின் பொழுது குட்கா போன்ற போதை பொருட்கள் கிடைக்கபெற்ற நிலையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.