கோவையில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ‘தமிழ்நாடு என்கிற பெயரை ஏற்கவில்லை; காமராஜருக்கு வீழ்ச்சி தொடங்கியது’: ஆ. ராசா பேச்சு
அதன் அடிப்படையில் கோவை சுல்தான்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட சித்தநாயக்கன் பாளையம் பகுதியில், போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த பப்ளு குமார் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600 கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil