பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து இன்று முதல் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தின் சார்பாக பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இன்று முதல் 14 ஆம் தேதி வரை பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை,தேனி மாவட்டங்கள் செல்லக்கூடிய பேருந்துகள் கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் .கரூர், திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், மேட்டுப்பாளையம் சாலை -ஊட்டி, கூடலூர் செல்லக்கூடிய பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.
கோவை-மதுரை மார்க்கமாக 200 பேருந்துகளும், கோவை-திருக்சி மார்க்கமாக 200 பேருந்துகளும், கோவை -தேனி மார்க்கமாக 100 பேருந்துகளும், கோவை-சேலம் மார்க்கமாக 250 பேருந்துகள் செல்லும். மேலும் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருத்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“