கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி உற்பத்தி குறைந்து உள்ளது.
இதே போல் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு காய்கறி வறுத்து குறைந்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறி விலை உயர்ந்து உள்ளது.
/indian-express-tamil/media/media_files/QbbKDNLapfWVd3wFSwya.jpeg)
காய்கறி விலை தற்போது உயர்ந்து உள்ளது.நாட்டுத்தக்காளி கிலோ ரூ. 90, ஆப்பிள் தக்காளி கிலோ ரூ. 100, பெரிய வெங்காயம் கிலோ ரூ.50, சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் ரூ. 40, பீன்ஸ் ரூ. 80, அவரை ரூ.75, பாகற்காய் ரூ. 60, பச்சை மிளகாய் ரூ. 85, முருங்கக்காய் ரூ.100, சுண்டைக்காய் ரூ.140, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ. 90, கேரட் ரூ. 85, பீட்ரூட் ரூ.75, குடமிளகாய் ரூ.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/8xpp8XQVrxIabl0oKvuu.jpeg)
வழக்கமாக முட்டைக்கோஸ் விலை குறைவாக இருக்கும் தற்பொழுது முட்டைக்கோஸ் ரூ. 50"க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை உயர்ந்த கிலோ ரூ.254 விற்பனை செய்யப்படுகிறது.
பழங்களின் விலையும் உயர்ந்து உள்ளது. மாதுளை கிலோ ரூ. 200, திராட்சை ரூ.80, மாம்பழம் ரூ. 150, ஆப்பிள் ரூ.220, ஆரஞ்சு ரூ.100, சாத்துக்குடி ரூ. 60, அன்னாசிப்பழம் 45க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்., கோவை