/tamil-ie/media/media_files/uploads/2023/07/wall-collapse.jpg)
கோவை தனியார் கல்லூரியில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் மரணம்
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மேற்குவங்க மாநிலத்தை பரூன் கோஸ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
இதையும் படியுங்கள்: தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை
இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சைட் இன்ஜினியர் சாதிக் உல் ஆமிர், கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய 3 பேர் மீதும் 2 பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.