கோவை குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு சரியாக மூடாத குழியில் தனியார் பள்ளி பேருந்து சிக்கிய நிலையில், அதிலிருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகள் சரி வர மூடாமல் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
/indian-express-tamil/media/post_attachments/1e27d088-d18.jpg)
இந்நிலையில் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 87 ஆவது வார்டு குனியமுத்தூர் பாரதி நகர் பிரதான சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடாத காரணத்தால் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/217c5628-b8c.jpg)
இந்நலையில் இன்று மாலை அந்த வழியாக குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து குழியில் சிக்கியதால் எதிர்பாராமல் பேருந்து சரிந்தது. தொடர்ந்து பேருந்தில் இருந்த குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/3320fe08-942.jpg)
இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே பலமுறை புகார் அளித்தும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடமாலும் சரி வர பணிகள் செய்யப்படாமல் இருப்பதால்தான் இத்தகைய பிரச்சனைகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“