கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் 2023ம் ஆண்டு ஒரு 721 ரூபாய் சம்பளம் ஒதுக்கீடு செய்யப்பட்டது . தற்போது 2023 மற்றும் 2024 ம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவிக்கின்ற சம்பளத்தை இதுவரை தரவில்லை.
நீண்ட நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் டிரைவர் கிளீனர்கள் அனைவருக்குமே எவ்விதமான சம்பளமும் நியமனம் செய்யாத காரணத்தினால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பாக கோவை வ.உ.சி மைதானத்தில் தற்போது காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்களது பிரதான கோரிக்கையாக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“