கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாக்கடையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்வது மற்றும் மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இதை தடை செய்துள்ளது. ஆனால் இருப்பினும் சாக்கடையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: மனைவியுடன் சண்டையில் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட கணவன்; எதிர்பாரா விதமாக தீப்பிடித்ததில் 5 பேர் மரணம்
இந்த நிலையில் இன்று கோவை ரயில் நிலையம் எதிரே தூய்மை பணியாளர்கள் சாக்கடையில் இறங்கி தூய்மை செய்யும் சம்பவம் நடைபெற்றது. அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்களில் ஒருவர் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏன் சாக்கடை குழிக்குள் இறங்கினீர்கள், யார் உங்களை இந்த பணிக்கு பயன்படுத்தியது என கேள்வி எழுப்பினார்.
அப்போது சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருந்த வயது முதிர்ந்த தொழிலாளி கவுன்சிலர் மற்றும் ஏ.இ., இறங்க சொன்னார்கள் என தகவல் தெரிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை எடுத்த அந்த நபர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil