சென்னையில் பல கிளைகளுடன் இயங்கிவரும் சரவண செல்வ ரத்தினம் ஸ்டோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையிலும் தனது கிளையை பரப்பியது.
கோவை ஒப்பணக்கார வீதியில் 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பிரமாண்டமாக இயங்கி வந்தது இந்தக் கடை.
ஏற்கனவே அங்கு கணபதி சில்கஸ், சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட முக்கிய துணிக்கடைகள் இருந்த போதிலும், சென்னையை மையமாகக் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கென நிரந்தர வாடிக்கையாளர்கள் விரைவில் கிடைத்தார்கள்.
இந்நிலையில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது இக்கடை. பார்க்கிங் இடத்தை குடோனாக பயன்படுத்தி வந்ததாலும், திறந்தவெளி பகுதி இல்லாமல் செயல்பட்டதாலும், தற்போது கோவை சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு, கோவை மாநகராட்சி அதிகாரிகள் ’சீல்’ வைத்துள்ளனர்.
சமீபத்தில் போக்குவரத்துக்கு இடையூறு தருவதாகக் கூறி, மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், திருநெல்வேலி சரவணா ஸ்டோருக்கு ’சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.