இந்திய தேசிய கொடி உருவான வரலாற்றை தத்ரூபமாக ஓவியமாக வரைந்து பள்ளி மாணவ மாணவிகள் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தினர்.
Advertisment
இந்திய நாட்டின் 77 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்திய தேசிய கொடி உருவான வரலாற்றை தத்ரூபமாக வரைந்த மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.
இதில் கடந்த 1857 முதல் 1904, 1907, 1908, 1917 என பல ஆண்டுகளாக உருமாறி இறுதியாக 1947 ஆம் ஆண்டு தேசிய கொடி உருவான விதத்தை தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர்.
இதில் 1907ஆம் ஆண்டின் கொடியான பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களில் நடுவில் வந்தே மாதரம் பொறிக்கப்பட்ட முதல் கொடி முதல் இறுதியாக ஒரே அளவிலான காவி, வெள்ளை, பச்சை வண்ண பட்டைகளுடன், நடுவில் நீல நிறத்திலான அசோக சக்கரம் தாங்கிய கொடியான இந்திய நாட்டின் தேசிய கொடியை பிடித்த படி மாணவர்கள் தத்ரூபமாக அணி வகுத்து நின்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரம்மாண்ட தேசிய கொடி பள்ளி வளாகம் முழுக்க பறக்க விடப்பட்டது.
நம் தேசியக் கொடியின் அணிவகுப்பு தேசியக் கொடியின் வரலாற்றை பிரதிபலிக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்தி்ன் உட்பட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil