மாணவர்களிடம் அறிவியல் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கவும், மாணவர்களை விஞ்ஞானிகளாக மாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவை கரும்புகடை பகுதியில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/53859858-b4f.jpg)
அதன் படி இந்த ஆண்டும், இரண்டு நாட்கள் அறிவியல் திருவிழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளார் அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் துணை ஆணையர் டாக்டர்.செல்வசுரபி அறிவியல் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/cd9a2dd0-fbc.jpg)
இந்த கண்காட்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் பல்வேறு மாதிரிகளை காட்சிப்படுத்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நடுவர்கள் குழந்தைகளின் திறமையைக் கண்டு வியந்தனர். பிற பள்ளி மாணவர்களும் கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/3ea92f6e-4f6.jpg)
கண்காட்சியைப் பார்வையிட பெற்றோர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படுட்டது. பள்ளியின் முதல்வர் சசிகலா ராணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வு குழந்தைகளுக்கு அறிவியல் ஆய்வுகள் மற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை