வேறு இடத்தில் கடைகள் மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
Advertisment
இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வளாகத்தில் சாலை வசதிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி சில தினங்களில் துவங்கப்பட உள்ளதாகவும் எனவே இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகளும் பணிகள் முடியும் வரை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருகிடங்கு மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்துக் கொள்ளும்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் நோட்டீஸ்க்கு அண்ணா தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எருகிடங்கு மைதானத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் நடைபெறாது எனவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படையும் எனவும் ஏற்கனவே எம்ஜிஆர் மொத்த காய்கறி மண்டியிலும் சில்லறை வியாபாரங்களும் துவங்கி விட்டதால் அண்ணா தினசரி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தங்களை இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் தற்போது கிடைக்கும் வருமானமும் இழக்கக்கூடும் எனவும்
Advertisment
Advertisements
எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த நோட்டீசை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“