Advertisment

’கல்குவாரிகளில் மாமுல் வசூலிக்க வருக’; படத்துடன் கூடிய போஸ்டரால் கோவையில் பரபரப்பு

இ.டி.,க்கு அல்வா கொடுத்து, கோவை மாவட்ட கல்குவாரிகளில் கொள்ளையடிக்க வருகை தரும் நபர்களே; கோவை நகரில் படத்துடன் கூடிய போஸ்டரால் பரபரப்பு

author-image
WebDesk
New Update
Tirunelveli, quarry accident

இ.டி.,க்கு அல்வா கொடுத்து, கோவை மாவட்ட கல்குவாரிகளில் கொள்ளையடிக்க வருகை தரும் நபர்களே; கோவை நகரில் படத்துடன் கூடிய போஸ்டரால் பரபரப்பு

Listen to this article
00:00 / 00:00

கோவை மாவட்டத்தில், அரசு இடங்களில் உள்ள கல்குவாரிகளில்  ஏலம் எடுப்பதிலும், அரசு, தனியார் குவாரிகளில் கற்கள் எடுப்பதிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் குற்றசாட்டுகள் எழுப்பி வரும் நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக கோவை நகர் பகுதிகளில் மணல் குவாரி முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் கல்குவாரி டெண்டர் முறையீடு செய்ய போவதாகவும், மணல் கொள்ளையில் ஈடுபட கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால், அவர்களின் படங்களுடன் கூடிய போஸ்டர்களை நகரில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் என்னவென்றால் ’கோவை மாவட்ட பகுதியில் கல்குவாரிகளில் மாமுல் வசூல் செய்ய வரும் நபர்களை வருக வருக’ என வரவேற்பதாக கூறி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதனால் சாலைகளில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் கேள்வியும் எழுப்பி உள்ளது, கோவை நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கல்குவாரி முறைகேடுகள் ஏதும் நடந்து உள்ளதா? இல்லை மாவட்ட கனிம வளத்தை சுரண்ட போகிறார்களா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் கோவை பகுதிகளில் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment