கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் டீ தூள் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதளவு பிடித்த தீ மளமள என்று குடோன் முழுவதும் பரவியது.
தகவல் அறிந்தது கோவை வடக்கு, தெற்கு,பீளமேடு மற்றும் கோவை புதூர் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரார்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். இதில் குடோனில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த டீ தூள் எரிந்து சேதமடைந்த நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடோன் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்த நிலையில் பட்டாசு வெடித்து விழுந்து தீ பற்றியதா ? அல்லது வேறு காரணமா ? என்று கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“