காடா உற்பத்தி நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; கோவை ஆட்சியரிடம் ஜவுளி கூட்டமைப்பினர் கோரிக்கை

கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்; விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு கொண்டு வர வேண்டும்; கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் கோரிக்கை

கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்; விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு கொண்டு வர வேண்டும்; கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் கோரிக்கை

author-image
WebDesk
New Update
Kovai textile

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி காடா உற்பத்தி நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Advertisment

விசைத்தறி வேலை நிறுத்தம் காரணமாக ஓ.இ. நூற்பாலைகள் நஷ்டம் அடைந்து வருகிறது. இதனையடுத்து விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டி ஆட்சியரிடம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் சார்பில் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெயபால் மற்றும் நூற்பாலை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தில் 8 லட்சம் ரோட்டார் திறன் கொண்ட 650 ஓ.இ நூற்பாலைகளும், 1.9 கோடி ஸ்பிண்டல் திறன் கொண்ட 1700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும், அவை உற்பத்தி செய்யும் நூல்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 5.5 லட்சம் விசைத்தறிகளும் 2.5 லட்சம் ஆட்டோ லூம்களும், 5700 ஆயத்த ஆடை நிறுவனங்களும் 1.87 லட்சம்  கைத்தறி துறையினரும் 17 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவு ஓ.இ மில்களும், ஸ்பின்னிங் மில்களும், விசைத்தறி, ஆட்டோ லூம், ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளன. நூலை கொள்முதல் செய்து சைசிங், டையிங், நிட்டிங், வீவிங் பிரிண்டிங், காஜா, பட்டன், ஸ்டிச்சிங், பேக்கிங் ஐயனிங் என பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த இருமாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உள்ளன.

Advertisment
Advertisements

ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜாப் ஒர்க் செய்து தருபவர்களுக்கு இடையே விலை முரண்பாட்டால் பெரும்பாலும் தொழில் நடந்து வருகின்றது. காடா உற்பத்தி செய்து வரும் கோவை திருப்பூர் மாவட்ட விசைதறியாளர்கள் இடையே மட்டும் ஜாப் ஒர்க் கட்டணம் தொடர்பாக கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அரசு தலையிட்டே சமரசம் செய்யும் நிலை உள்ளது. நிரந்திர தீர்வு ஏற்படாமல் கடந்த 2014 கட்டணம் கிடைக்கவில்லை, 2022 ஒப்பந்தம் செயல்படுத்த வில்லை புதிய கட்டண ஒப்பந்தம் வேண்டும் என தற்போது (2025) உற்பத்தி நிறுத்தம் செய்து உள்ளதினால் இந்த பகுதிக்கு நூலை விற்பனை செய்து வந்த நூற்பாலைகள் கடும் இன்னல்களையும் பொருளாதார நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றோம்.

இந்த பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கிலோ நூல்களை கொடுத்து வருகின்றோம். கடந்த பிப்ரவரி முதலே ஸ்ட்ரைக் வர உள்ளது என நூல் வாங்குவதை தவிர்ப்பதும் கிலோ ஒன்றுக்கு 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைத்து வாங்குவதும் ஸ்ட்ரைக் அறிவிப்பிற்கு பின் மேலும் விலை குறைவாக கேட்பதினால் இன்று வரை நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் நூல் இருப்பும் ஏற்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை அவ்வப்போது தொடருவதினாலும், மற்ற பகுதிகளிலும் எதிரொலிப்பதினாலும் மாநில முழுவதிலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு நூற்பாலைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றோம். நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தும், விற்பனை சரிவினால் பணபுழக்கம் குறைந்து வருவதினால் வங்கிகளுக்கு கடன் திருப்பி செலுத்தவும், மின்கட்டணம் செலுத்தவும், சப்ளையர்களுக்கு வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க இயலாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.

நூற்பாலை இயங்கினாலும் இயங்காவிட்டாலும் LTCT மின்கட்டணம் 17950 ரூபாய் மற்றும் HT. நுகர்வோர்கள் 2 லட்சம் முதல் 4.5 லட்சம் ரூபாய்  வரை வாங்கிய டிமாண்ட் சார்ஜ் செலுத்த வேண்டும். ஸ்ட்ரைக் முடியும் வரை ரத்து செய்து, திருப்பிச் செலுத்துதல் (Repayment) மற்றும் வணிக வரி செலுத்த கால அவகாசம் வேண்டுகின்றோம்.

மதிப்புகுரிய மாவட்ட ஆட்சியர் எங்கள் நிலை உணர்ந்து விசைதறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி ஸ்ட்ரைக் முடிவுக்கு கொண்டு வர வேண்டுகின்றோம். என கூட்டமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பி.ரஹ்மான், கோவை

kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: