Advertisment

போக்குவரத்து காவலருக்கு ஏர்கூலர் வசதிகளுடன் நிழற்குடை; கோவை கமிஷனர் திறந்து வைப்பு

வெயிலில் போலீசார் சோர்வு அடையாமல் இருக்க ஏர் கூலர் வசதியுடன் கூடிய நிழற்குடை; கோவை கமிஷனர் திறந்து வைப்பு

author-image
WebDesk
Apr 01, 2023 18:46 IST
New Update
Kovai traffic police

கோவையில் ஏர்கூலர் பொருத்தப்பட்ட நிழற்குடையை போக்குவரத்து காவலருக்காக திறந்து வைத்தார் கமிஷனர் பாலகிருஷ்ணன்

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசருக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

வெயிலில் போலீசார் சோர்வு அடையாமல் இருக்க ஏர் கூலர் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்குடையில் சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்து போலீசார் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்: அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் விதமாக கோவையில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

இந்நிலையில் புதிய நிழக்குடையை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, அதிகளவு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான சந்திப்பில் தற்போது ஒலிப்பெருக்கி, சிசிடிவி கேமராக்களுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

publive-image

கோவை கமிஷனர் பாலகிருஷணன் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது

இதன் மூலம் காவலர்கள் சிரமமின்றி 4 புறங்களிலும் தொடர்ந்து கண்காணிக்கவும் விபத்துகளை குறைக்கவும் உதவியாக இருக்கும். இதே போல மற்ற முக்கிய சந்திப்புகளில் நிழற்குடை அமைக்க உள்ளோம், கோடை காலம் என்பதால் காவலர்களுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இம்மாதிரியான நிழற்குடைகள் மூலம் காவலர்களும் பணியாற்ற எளிதாக இருக்கும். தற்போது சில இடங்களில் சாலை பணிகள் வேறு நடப்பதால் பணிகள் நிறைவடைந்த பின் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu #Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment