scorecardresearch

டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட யூடியூபர்கள் கைது

டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த யூடியூபர்கள் கைது.

டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட யூடியூபர்கள் கைது

டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த யூடியூபர்கள் கைது.

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதியில்  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். 

இதனால் திருநங்கை அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அதில் ஆத்திரம் அடைந்து காரில் வந்த ஒருவர்  சினிமா சூட்டிங்கிற்க்கு பயன்படுத்தபடும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் துப்பாக்கி காண்பித்து திருநங்கையை  மிரட்டியதாக தெரிகிறது.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் சம்பவ இடத்திற்க்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரனை நடத்தியதில் மூவரும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த  திலீப் (33)  கிஷோர் (23) சமீர் (30) என்பதும்  யூ டியூப் சேனல் நடிகர்கள், என்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து  ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.  மேலும் அவர்கள் ஓட்டி வந்த காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai transgender threatened by youtubers