கோவையில், விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை, சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பு பூங்காவில் மின்சாரம் பாய்ந்து இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விபத்து நடந்த இடத்தில் வடக்கு காவல் துணை ஆணையர் ஆய்வு செய்தனர். பூங்காவில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சறுக்கில், மின்சாரம் பாய்ந்ததே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது மின் வாரியத்தின் முறையான அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
கோவை வடமதுரை செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் துணை செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர்.பார்க் டெவலப் செய்யும் பொழுது கீழே கேபிள் அவர்கள் போட்டு இருக்கின்றனர். தெருவிளக்கு ஆன் செய்யும்பொழுது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர்
இது மின்வாரிய பொறுப்பு கிடையாது. அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
இதனிடையே விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கோவை வடமதுரை மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் துணை செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடித்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேட்டி அளித்த அதிகாரிகள், “குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர் எனவும்,
பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின் கீழே மின் கேபிள் அவர்கள் போட்டு இருக்கின்றனர் எனவும் , தெருவிளக்கு ஆன் செய்யும்பொழுது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
இந்த இடம் மின்வாரிய பொறுப்பு கிடையாது எனவும், அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“