கோவை நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்றிரவு கோவை புறப்பட்டது. இன்று காலை அவினாசி சாலை கோல்டுவின்ஸ் அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்தில் புகை வந்துள்ளது.
சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் பேருந்தை நிறுத்திய போது அதில் தீப்பிடித்தது. உடனடியாக பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் கருகி நாசமானது.
பேருந்தின் டீசல் டேங்கில் மின் விபத்து ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தீ விபத்தால் அவினாசி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“