கோவை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பாக கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க சார்பாக அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலாமணி போட்டியிட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானது. இந்நிலையில் தந்தி டி.வி எக்ஸிட் போல் தொடர்பாக செய்த ஆய்வில் கோவை பற்றி வெளியிட்ட தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
கோவையில் தி.மு.க 31.5 % வாக்குகள் பெறும் என்றும், அ.தி.மு.க 31% வாக்குகள் பெறும் என்றும் பா.ஜ.க 30.5% வாக்குகள் பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தய கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது.
சூலூர் மற்றும் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சூலூரில் அ.தி.மு.க வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும். அங்கு மக்களை கவரும்படி அ.தி.மு.க, தி.மு.க அல்லாதவர்கள் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
தெற்கு கோவையில் பா.ஜ.க ஜெயிக்க சாத்தியங்கள் அதிகம். இதை தாண்டி தி.மு.க எல்லா தொகுதிகளிலும் தங்களது வாக்கு வங்கியை இழக்காமல் தொடர்ந்து அதிக வாக்குகளை பெறும் நிலையில் இருக்கிறது. பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தங்களுக்குள் போட்டியிட்டு பல்வேறு இடங்களில் அ. தி.மு.க குறைவாக வாக்குகள் பெற காரணமாக இருக்கிறது. வாக்குக்ல் பிரிவது என்பதை காட்டிலும், இதுதான் கோவையின் நிலை. கோவையில் அ.தி.மு.க நன்றாகவே பணியாற்றி உள்ளது. அந்த அளவிற்கு தி.மு.கவின் வாக்கு வங்கு அதிகமாக இல்லை. ஆனால் பா.ஜ.க – அ.தி.மு.க இடையில் வாக்குகள் பிரிக்கப்படுவதால், தி.மு.க விற்கு எந்த போட்டியும் இல்லாமல் அதன் வாக்கு சதவிகிதம் அதிகமாகி உள்ளது.
கோவையை பொறுத்தவரை அ.தி.மு.கவின் பூத் உறுப்பினர்கள், தங்களது வாக்கு பா.ஜ.க-விற்கு செல்கிறது என்பதை கணித்துவிட்டார்கள். கோவையில் மூன்று பேருக்கும் இழுபறி நிலவுகிறது. இருந்தாலும் அ.தி.மு.க மிகவும் அதிகமாக களத்தில் வேலை செய்துள்ளது என்பதால், அங்கே அ.தி.மு.க வெற்றியடைய வாய்ப்புள்ளது. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், தி.மு.கவின் ஓட்டு பிரிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.