பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் தொழில் முனைவோர் கைவினை பொருட்கள் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பெண் தொழில் முனைவார்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
ஜனவரி 4 மற்றும் 5 என இரு நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகளும் மேலும் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் என அனைவருக்குமான ஆடை அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான அலங்கார பொருட்கள், துணி வகைகள், காலணிகள் என அனைத்து விதமான சுமார் 75 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
மேலும் இந்த கண்காட்சியில் பெண்களுக்கு தொழில் முனைவோர் திறனை வளர்த்தல், அவர்களின் தொழில் மேம்படுத்துதல் மற்றும் சுயதொழில் முன்னேற்றத்தை அடையவும், சுயதொழிலில் வளர்ச்சியடைய ஆலோசனைகளை பெறும் விதமாக இந்த கண்காட்சி இருக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் நிறுவனர் ராதா பெல்லன் மற்றும் செயலாளர் சுமிதா ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் 5"ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் தொழில் முனைவோர் கண்காட்சி டாடாபாத் பகுதியில் உள்ள வியாசா மந்திர் அரங்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“