/indian-express-tamil/media/media_files/fH92cEupOle5rvThKDou.jpeg)
இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு சார்பாக கோவை மாவட்ட பெண் தையல் தொழிலாளர்களுக்கென பிரத்யேக அலுவலக திறப்பு விழா உக்கடம் தாஜ் டவர் வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் செயல் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் இதாயத்துல்லா கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து பொன் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது அப்போது மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர்
மத்திய பட்ஜெட்டில் நாங்கள் நிறைய எதிர்பார்ப்பதாகவும், செய்யக்கூடிய இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறாரா என்பதுதான் கேள்வி என குறிப்பிட்டார்.
ஏனென்றால்,இதுவரையில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தை ஒன்றிய அரசு செய்திருப்பதாகவும்,பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு கல்லூரி நடந்து வரும் நிலையில்,அதே நேரத்தில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டு செங்கல் மட்டுமே இங்கு இருப்பதாக கூறினார்.
அதே போல தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட போது ஒரு பைசா கூட நிதியும் தராமல்,நேரில் கூட வந்து பார்க்காத இந்திய பிரதமர் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்திற்கு பல முறை வந்து சென்றதை சுட்டி காட்டினார்.
தமிழக முதல்வர் கூறியது போல,வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதலமைச்சர் என்று கூறியதை சுட்டி காட்டிய அவர்,ஒன்றிய அரசும் எல்லா மாநிலங்களையும் சமமாக கருத வேண்டும் என தெரிவித்தார். ஜி.எஸ்.டி போன்ற ஒரு மிகப்பெரிய சுரண்டல் முறை மூலம் தமிழ்நாட்டில் வரிப்பணங்களை வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லாமல், எல்லா மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட்டாக இந்த முறை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் தாக்கல் செய்யும் என்று நம்புவோம் என இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.