திருவாரூரில் கோவில் திருவிழாவில் பிளக்ஸ் போர்டு வைக்கும்போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பிளக்ஸ் போர்டு வைத்து போது விபத்து ஏற்பட்டதாகவும். கோவில் திருவிழா குறித்த பிளக்ஸ் போர்டு திருவிழா குறித்த பிளக்ஸ் போர்டு வைக்கும்போது, மின் கிம்பியில், உரசியதில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் 15 வயதான மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை மற்ற இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.